சினேகாவின் முதல் திருமணம் நின்று போக காரணம் இது தான்..! - உருகி உருகி காதலித்தும் ஏமாற்றம்..!

 
ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த சினேகாவின் உண்மையான பெயர் சுஹாஷினி. இவர்களது குடும்பம் ஷார்ஜாவிற்கு சென்றதால் அங்கு பள்ளி படிப்பை முடித்த சினேகா, பின் தமிழகத்தின் பண்ருட்டியில் வசித்து வந்தார். 
 
2000ம் ஆண்டு மலையாளத்தில் அனில்-பாபு இயக்கிய இங்கனே ஒரு நீலபக்ஷி படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்ற போது சினேகாவின் பெயரை பாசில் நஜீம் பரிந்துரை செய்துள்ளார். 
 
இந்த படத்தில் டான்சராக வந்து சினிமா உலகிற்கு அறிமுகமான சினேகா, முதல் படத்திலேயே 7 கர்நாடக பாடல்களுக்கு நடனமாடினார். அதே ஆண்டு தமிழில் சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சினேகா, தொடர்ந்து என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பசிதீரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட நடித்துள்ள சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தின் ஆங்கில பதிப்பிலும் நடித்துள்ளார். 
 
இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர், எடிசன் மற்றும் குளோபல் விருதுகளையும் பெற்றார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர், நந்தி, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை சினேகா பெற்றுள்ளார். 
 
பல விளம்பர படங்களிலும் நடித்துள்ள சினேகா, 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.இன்று நடிகை சினேகா தன் காதல் கணவர் பிரசன்னாவுடன் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாலும், இவரின் முன்னாள் காதலில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பிரபல யூ ட்யூப் சேனலில் கூறியுள்ளார். 

 
அதில், “தயாரிப்பாளர் நாக்ரவி என்பவரை உருகி உருகி காதலித்தார் சினேகா. அதன் பின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால், அதன் பின் அவரின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்த சினேகா அந்த காதலை உதறி தள்ளிவிட்டு இனி திருமணம் செய்து கொள்ளபோவதில்லை என்று படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 
 
அதன் பின் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு இன்று இருவரும் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

சினேகாவின் முதல் திருமணம் நின்று போக காரணம் இது தான்..! - உருகி உருகி காதலித்தும் ஏமாற்றம்..! சினேகாவின் முதல் திருமணம் நின்று போக காரணம் இது தான்..! - உருகி உருகி காதலித்தும் ஏமாற்றம்..! Reviewed by Tamizhakam on February 25, 2021 Rating: 5
Powered by Blogger.