அனிருத்துடன் காதல் கிசுகிசு - ஒரே ஒரு போட்டோவில் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!


கடந்த சில வாரங்களாக தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நெருங்கி காதலித்து வருவதாக வந்த வதந்திகள் காட்டுத் தீயை விட வேகமாக பரவ ஆரம்பித்தன. 
 
என்ன ஏது என்று யோசிப்பதற்குள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைத்தனர். இதனால் கீர்த்தி சுரேஷ் தரப்பு மிகவும் அப்செட்டில் உள்ளதாம். 
 
சமீபத்தில்கூட கீர்த்தி சுரேஷ் தந்தை இதெல்லாம் பொய்யான செய்தி என குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் சினிமாக்காரர்கள் வெளியில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை போல இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தையே கிளறி கொண்டிருந்தனர். 
 
இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என கீர்த்தி சுரேஷ் அதிரடியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 
 
அனிருத்துடன் ஏற்கனவே சில நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கினர். சமீபத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் வெளியானதில் இருந்து அவர்கள் காதிலித்து வருவதாகவும், திருமணத்திற்கு தயாராகி விட்டது போன்றும் செய்திகள் காட்டுத்தீயானது. 
 

ஆனால் இதுப்பற்றி சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது, தனது அம்மா மேனகா தனது கையில் மருதாணி வைத்து விடும் ஒரு போட்டோவை பதிவிட்டு, இதுதான் உண்மையான காதல் என்று பதிவிட்டுள்ளார்.

அனிருத்துடன் காதல் கிசுகிசு - ஒரே ஒரு போட்டோவில் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..! அனிருத்துடன் காதல் கிசுகிசு - ஒரே ஒரு போட்டோவில் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.