90களின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹீரா ராஜகோபால். 1971ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் ஹீரா. இவருடைய உண்மையான பெயர் ஜனனி ராஜகோபால்.
இவருடைய அப்பா ராஜகோபால் அப்போலோ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர். அம்மா இராணுவத்தில் நர்ஸாக பணியாற்றியவர். நடிகை ஹீரா , நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத் இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இவர் கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி, அஜித் குமார், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவி தேஜா, ரமேஷ் அரவிந்த், மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
தல அஜித்துடன் காதல் கோட்டை, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
தல அஜித்துடன் நடித்த காலங்களில் தல அஜித்தும் இவரும் காதலித்து வருவதாக இவர்கள் இணைந்து நடித்த காலங்களில் கிசு கிசு வந்து கொண்டே இருக்கும்.
கொஞ்ச காலங்களில் இவரின் மார்கெட் குறைய தொடங்கின பின் இவர் புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஒருவழியாக செட்டில் ஆனார் அதன் பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.
தற்போது ஹீரா ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கும் வேலை உதவி செய்து வருகிறார்.




