"இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு.." - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு..! - கதறும் ஆண்ட்ரியா..!


தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். 
 
அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
வடசென்னை திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் நாயகனுடன் படகில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. படம் வெளியான அன்று படத்தில் இடம் பெற்றிருந்த இந்த காட்சி சில நாட்களில் நீக்கப்பட்டது. 
 
படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஒருவேளை, பிளாஸ்டிக்-கை தடை செய்யாமல் பழைய படி VCD, DVD புழக்கத்தில் இருந்திருந்தால் பர்மா பஜாரில் ஆண்ட்ரியாவின் வீடியோ என விற்பனை தூள் பறந்திருக்கும். 
 
இப்படித்தான், கபாலி பட ஹீரோயின் ராதிகா ஆப்தேவின் வீடியோ ஒன்றை அந்த படம் ரேஞ்சுக்கு விற்றுதள்ளினார்கள். இந்நிலையில், வட சென்னை படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடித்தது என்னுடைய வாழ்நாள் தவறு என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா.அந்தக் காட்சிகளில் அவ்வாறு நடித்திருந்ததை நினைக்கும்போது, தனக்கு இப்போது அவ்வாறு நடித்திருக்கக் கூடாது என தோன்றுவதாக கூறியுள்ளார். 
 
ஆண்ட்ரியா இப்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் அந்தக் காட்சிகளால் தன் எதிர்காலம் பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் நெருக்கமான சில காட்சிகளில் நடித்த பிறகு, அதேபோல ஒத்த கதாபாத்திரங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும் அவை அனைத்தும் ஒன்றுபோலவே இருந்ததாகவும் கூறியுள்ளார். 
 
அப்போதுதான் தவறான முடிவை எடுத்து நடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ’வடசென்னை’ என்பது தான் எடுத்த தவறான முடிவு என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

"இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு.." - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு..! - கதறும் ஆண்ட்ரியா..! "இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு.." - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு..! - கதறும் ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.