சீரியலில் பால் வடியும் முகத்துடன் தோன்றும் கிருத்திகா லட்டுவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
திருமுருகன் இயக்கி தயாரித்த தேன் நிலவு தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா லட்டு. இந்த தொடரைத் தொடர்ந்து பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களின் மூலம் சிறந்து விளங்கினார். 
 
மேலும், சூப்பர் மாம் (Super Mom) என்ற ரியாலிட்டி ஷோவில், மகள் ஸ்ரீகாவுடன் இணைந்து கலந்து கொண்டார். மேலும், வாரந்தோறும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது. 
 
வார இறுதியில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கிருத்திகா லட்டு தன்னுடைய சமையல் திறன்களை வெளிப்படுத்தினார். இந்த பிரபலங்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நாவில் நீர் ஊறும் சுவையான உணவை சமைத்தார். 
 
 
இவர்களுடன் இணைந்து சமையல் கலை நிபுணர்கள் செப் தாமு மற்றும் செப் ஸ்ரேயா அட்கா ஆகியோரும் ருசியான சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளை செய்து அசத்தினார்கள். சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 600028 II மற்றும் இனிமே இப்படித்தான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் கிருத்திகா லட்டு.
 
 
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதை பார்த்து வருகிறோம். சினிமா மட்டுமில்லாமல், சீரியலிலும் ஹீரோயிங்களுக்கான போட்டி கடுமையாக உள்ளது என்பது இதன் மூலம் தெரிகின்றது.
 
 
அந்த வகையில்,கிருத்திகா லட்டுவும் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சிலபுகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்க சீரியலில் பால் வடியும் முகத்துடன் தோன்றும் கிருத்திகா லட்டுவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

சீரியலில் பால் வடியும் முகத்துடன் தோன்றும் கிருத்திகா லட்டுவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! சீரியலில் பால் வடியும் முகத்துடன் தோன்றும் கிருத்திகா லட்டுவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.