"பட வாய்ப்புக்காக என்னை அதற்கு இணங்க சொன்னார்கள்.." - முதன் முறையாக வெளிப்படையாக கூறிய அனுஷ்கா..!
நடிகை அனுஷ்கா ஷெட்டி 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர்.
தாய் ஃபிரபுல்லா. அனுஷ்காவுக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர். தனது தந்தையின் வற்புறுத்தலால் விடுமுறை நாட்களில் யோகா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அவர், பின்னர் முழு ஈடுபாட்டுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
நடிகை அனுஷ்கா 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழில் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.
பார்பதற்கு குடும்ப பாங்கான முகவட்டுஇருந்தாலும் சினிமாவில் தாக்கு பிடிக்க வேண்டுமானால் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டால் தான் முடியும் என்பதை அறிந்திருந்த அனுஷ்கா தமிழில் முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டி இளசுகளின் இதயத்தை தாக்கினார்.
சமீப காலமாக, சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் பேசி வருகிறார்கள். நடிகர்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக முதன் முறையாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அனுஷ்கா, சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், என்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள். திரைத்துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது.
பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் தொந்தரவுகள் இல்லை.
ஆனாலும் சில கஷ்டங்கள் இருந்தன. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள். என்று கூறியுள்ளார்.
"பட வாய்ப்புக்காக என்னை அதற்கு இணங்க சொன்னார்கள்.." - முதன் முறையாக வெளிப்படையாக கூறிய அனுஷ்கா..!
Reviewed by Tamizhakam
on
February 08, 2021
Rating:
