நயன்தாராவா இது..? - நம்பவே முடியலையே..! - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

 
“நானும் ரவுடி தான்” பட வெற்றியைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோர் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் மூலம் ஒன்றிணைந்துள்ளனர்.
 
இந்த முறை எக்ஸ்ட்ரா போனஸாக சமந்தாவும் நடித்து வருவதால் ரசிகர்கள் பட்டாளம் செம்ம குஷியில் உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 
 
இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2020-ம் ஆண்டின் காதலர் தினத்தன்று படக்குழு வெளியிட்டது. தமிழ், தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த 2003 ம் ஆண்டு சத்தியன் அன்திகாத் இயக்கிய மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கினார்.
 
இந்த படத்தில் கெளரி என்ற கேரக்டரில் நடிகர் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இவர்கள் இருவரிடையேயான ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் மிகவும் பிரபலமானது. 
 
 
இந்நிலையில் நயன்தாராவின் முதல் பட போட்டோவை சமீபத்தில் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். நயன்தாராவா இது..? என அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ள நயன்தாராவின் போட்டோ உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நயன்தாராவா இது..? - நம்பவே முடியலையே..! - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! நயன்தாராவா இது..? - நம்பவே முடியலையே..! - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 21, 2021 Rating: 5
Powered by Blogger.