சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்கினியாக தோன்றும் செந்தில் குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
வயசானாலும் சிலருடைய அழகு மாறாது அந்த மாதிரிதான் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் பருவ மங்கையாக கலக்கிக் கொண்டிருக்கும் செந்தில்குமாரி போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. 
 
‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். 
 
தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர்.சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை செந்தில் குமாரி. 
 
 
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக செட்டாகக் கூடியவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து விருதும் வாங்கியிருக்கிறார். ஆனால் இன்ஸ்டாகிராமில் பருவ மங்கையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறாராம்.
 
 
இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகத்தான் இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் . 
 
அவன் இவன் படத்தில் விஷாலுக்கும் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறாராம். பாரதி கண்ணம்மா சீரியலில் இவரது கேரக்டரை பார்த்து ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள் .
 
 
அந்த சீரியல் வைரலாக போனாலும் இவரை பல பெண்கள் திட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர் மிகவும் சாப்டான கேரக்டராம் வீட்டில் கோபமே படப் மாட்டாராம்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை அப்படியே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். 
 

 
அந்த மாதிரிதான் தற்போது இவர் இவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். 


சீரியல்களிலும் படங்களிலும் வயதான கேரக்டரில் மாமியார் ஆகவும் அம்மாவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பார்த்து அப்படி எல்லாம் தெரியவில்லையே என்று உருகி தான் வருகிறார்கள்.

சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்கினியாக தோன்றும் செந்தில் குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்கினியாக தோன்றும் செந்தில் குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 19, 2021 Rating: 5
Powered by Blogger.