உடல் எடை குறைத்து சிக்கென மாறிய புன்னகையரசி சினேகா..! - வைரல் கிளிக்ஸ்..!


விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்த சினேகாவுக்கு அந்தத் திரைப்படம் வெளியாக தாமதமானதால் மாதவனுடன் இணைந்து நடித்த என்னவளே இவருக்கு அறிமுக திரைப்படமானது. 
 
குடும்பப்பாங்கான மற்றும் காதல் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட சினேகா இன்றுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 
 
எந்தக் கதாபாத்திரம் நடித்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய வெகு சில நடிகைகளில் நடிகை சினேகாவும் ஒருவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பட்டையைக் கிளப்பிய இவர் தமிழ் சினிமாவுக்கு "என்னவளே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். 
 
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.குடும்பப்பாங்கான மற்றும் காதல் திரைப்படங்களில் நடித்து வந்த சினேகாவுக்கு தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய இவருக்காக தனி ரசிகர் கூட்டமே உருவானது. 
 
 
ஆனந்தம், ஏப்ரல் மாதத்தில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், காதல் சுகமானது, வசீகரா, ஆட்டோகிராப், உன்னை நினைத்து என தமிழில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டையில் அதுவரை பலரும் கண்டிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் பல கதாநாயகிகள் நடிக்க தயங்கும் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். 


 
கால ஓட்டத்தில், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது குழந்தை பெற்ற பின், உடல் எடை கூடி காணப்பட்ட நடிகை சினேகா, தற்போது தன்னுடைய வெயிட்டை குறைத்து, செம ஸ்லிம்மாக மகள் பிறந்தநாளில் ஜொலித்துள்ளார். இது குறித்த ஸ்பெஷல் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

உடல் எடை குறைத்து சிக்கென மாறிய புன்னகையரசி சினேகா..! - வைரல் கிளிக்ஸ்..! உடல் எடை குறைத்து சிக்கென மாறிய புன்னகையரசி சினேகா..! - வைரல் கிளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.