"நாங்க ரெண்டு பேரும் ஒரே ராசி.." - மாளவிகா மோகனன் உணர்ச்சிவசம்..!


தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தனுஷின் டி43 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். தனுஷ் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்தும் வைரலாக்கி வருகிறார்.
 
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு பலமா நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ஒரே ஒரு இடம் தான். அந்த இடத்தில் அவர் பண்ண எக்ஸ்பிரஷன்களை ஏகப்பட்ட போட்டோ மீம்களாக போட்டு அவரையே லைக் செய்யவும் வைத்து விட்டனர் மீம் கிரியேட்டர்கள். 
 
நாங்கள் இருவரும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் என்று பிரபல நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி உடன் கூறியுள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 
 
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 
 
பின்பு ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. இந்த முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முடிவுற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. 
 
மாளவிகா மோகனன் இந்நிலையில் இப்படம் குறித்து மாளவிகா மோகனன் கூறும்போது, நானும் தனுஷும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து கற்றது, மேகியின் மீது நமக்கிருந்த பரஸ்பர அன்பு, மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் உங்கள் சிரிப்பு ஆகியவை இல்லாத குறையை உணர்வேன். 
 
முதல் கட்ட படப்பிடிப்பு மிக உற்சாகமாக இருந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்படும் என்று காத்திருக்கிறேன். இந்த அற்புதமான அணியோடு பணியாற்றியது அற்புதமாகவே இருந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

"நாங்க ரெண்டு பேரும் ஒரே ராசி.." - மாளவிகா மோகனன் உணர்ச்சிவசம்..! "நாங்க ரெண்டு பேரும் ஒரே ராசி.." - மாளவிகா மோகனன் உணர்ச்சிவசம்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.