கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியலையே..! - ட்ரெண்டாகும் புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், செம்ம லவ்வோடு கமெண்ட் செய்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
வந்த வேகத்தில் வாரிசு நடிகர் - நடிகைகள் திரையுலகிற்கு டாட்டா காட்டி விட்டு சென்ற நிலையில் ஆரம்பத்தில் தடு மாறினாலும், நிலையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் கீர்த்தி சுரேஷ். 
 
சிவர்கார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினி முருகன்', மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களும், அடுத்தடுத்து இவரை விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மாற்றியது. 
 
மேலும் இவர் நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்து, தமிழ், தெலுங்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். முன்னணி நடிகைகள் பட்டியலில் இருக்கும் இவரது... கால் ஷீட்டுக்கு பல நடிகர்கள் வெயிட்டிங். 
 
எனினும் அம்மணி நயன்தாரா பாணியில் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி பிடித்து நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 
 
கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இவருக்குத் திருமணமான செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் ஒரு முக்கியமான அரசியல் கட்சியுடன் நெருக்கமாகத் தொடர்பில் உள்ளவர். 
 
எனவே, கீர்த்தி சுரேஷூக்கு அவர் அரசியல் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

இந்நிலையில், படப்பிடிப்பு தளம் ஒன்றில் ரசிகருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னப்பா இது டோரா இங்க இருக்காங்க.. புஜ்ஜி எங்க இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியலையே..! - ட்ரெண்டாகும் புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியலையே..! - ட்ரெண்டாகும் புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.