"ரச்சுமா... சும்மா அள்ளுது.." - கொட்டும் மழையில் குடைக்குள் ரொமான்ஸ் - வைரல் வீடியோ - உருகும் ரசிகர்கள்..!


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.
 
சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை, ரச்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. 
 
இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் ரச்சிதா. தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும், அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாதா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, படிப்போடு சேர்த்து மறுபுறம் மாடலிங்கும் செய்துக் கொண்டிருந்தார். கன்னட சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான, ’மேக மந்தரன்’ என்ற சீரியல் தான் அவருக்கு முதல் தொடர். 
 
தொடர்ந்து 5 கன்னட சீரியல், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து விட்டு, 2011-ல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
 
அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த, ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம் 2, சரவணன் மீனாட்சி 2, 3, இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் நடித்திருக்கும் ரச்சிதா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாச்சியார்புரம்’ சீரியலில் நடித்து வருகிறார். 
 
இதில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் தான் ஹீரோ. அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான, ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இடம்பெற்றிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர் ரச்சிதா.
 

 
இந்நிலையில், தற்போது நடித்து வரும் சீரியல் ஒன்றில் கொட்டும் மழையில் எடுக்கபட்ட ரொமான்ஸ் காட்சி ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரச்சுமா ரசிகர்கள் சும்மா அள்ளுது என உருகி வருகிறார்கள்.

"ரச்சுமா... சும்மா அள்ளுது.." - கொட்டும் மழையில் குடைக்குள் ரொமான்ஸ் - வைரல் வீடியோ - உருகும் ரசிகர்கள்..! "ரச்சுமா... சும்மா அள்ளுது.." - கொட்டும் மழையில் குடைக்குள் ரொமான்ஸ் - வைரல் வீடியோ - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.