இணையத்தில் வைரலாகும் "இஞ்சி இடுப்பழகி" நீங்கப்பட்ட காட்சிகள் - அடேங்கப்பா அனுஷ்கா..!


ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அனுஷ்கா, தனது உயரம், எடை மற்றும் அழகால் பல ரசிகர்களை குவித்தார். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். 
 
தென் இந்திய நடிகைகளில் அதிகமான சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை இவர். தெலுங்கு திரையுலகில் எல்லாம், இவருக்கு கோடிகளில் தான் சம்பளம் என்று பலரும் பேசி வருவது வழக்கம். 
 
அவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்தது. அந்த படத்தின் பிறகு வெளிநாடு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பென்களும் அனுஷ்கா பாகுபலியில் அணிந்த ஆடை, நகைகள் என அனைத்தையும் வாங்கும் வேட்டையில் இறங்கினார்கள்.
 
இத்தகைய புகழுக்கு சொந்தக்காரியான அனுஷ்கா, 2015ம் ஆண்டில் வெளியான ‘இஞ்ஜி இடுப்பழகி’ படத்தில் உடல் எடை கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இந்த படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து பழைய ஒல்லி உடல் வாகிற்கு திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்துமே முழு பலன் அளிக்கவில்லை.இவரின் உடல் எடை கூடுதல் ஊர் வாய்க்கு அசைப்போட்டது போல் ஆனது. 
 
படங்கள் வாய்ப்பளிக்க இயக்குநர்கள் சிலரும் யோசித்து வந்தனர். பொதுவாகவே ஒரு படம் வெற்றியடைந்து வசூலை அள்ளிக்குவித்தால் அந்த புகழை ஹீரோ ஏற்றுக்கொள்வதும், அதுவே அப்படம் தோல்வியடைந்தால், பழியை ஹீரோயின் சுமப்பதும் வாடிக்கையாடி விட்டது. 
 
குறிப்பாக ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வடிவமைத்திருக்கிறார்கள். உடல் எடையை கஷ்டப்பட்டுகுறைத்தாலும் மீண்டும் பழைய படி குண்டாகி விடுகிறார் அனுஷ்கா. இவரது திருமணமும் இதனால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது.
 

 
இந்நிலையில், இஞ்சி இடுப்பழகி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் சேர்ந்த லிரிக்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் "இஞ்சி இடுப்பழகி" நீங்கப்பட்ட காட்சிகள் - அடேங்கப்பா அனுஷ்கா..! இணையத்தில் வைரலாகும் "இஞ்சி இடுப்பழகி" நீங்கப்பட்ட காட்சிகள் - அடேங்கப்பா அனுஷ்கா..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.