"கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது.." - டாப் நடிகருக்கு ஹீரோயினாக நடிக்க மறுத்த நயன்தாரா..!


மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். 
 
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடிக்க படக்குழுவினர் நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஆஃபரை நயன்தாரா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. 
 
இதனால் சிரஞ்சீவி அப்செட் ஆகியிருக்கிறாராம். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் நயன் நடித்த சைரா நரசிம்ம ரெட்டி மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்தது. 
 
அந்த ஐடியாவில் நயனை அணுக சிரஞ்சீவி முடிவு செய்தநிலையில், அவர் மறுத்திருக்கிறார். நயன்தாரா லூசிபர் ஆஃபரை ஒதுக்கியதற்கான காரணங்கள் வெளியாகவில்லை. 
 
ஆனால், லூசிபர் கதைப்படி படத்தில் ஹீரோயினுக்கு பெரிய ஸ்கோப் இல்லை. அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது என நயன் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள். 
 
இப்போது சிரஞ்சீவியின் லூசிபர் படக்குழு புதிய ஹீரோயினைத் தேடி வருகிறார்கள்.

"கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது.." - டாப் நடிகருக்கு ஹீரோயினாக நடிக்க மறுத்த நயன்தாரா..! "கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது.." - டாப் நடிகருக்கு ஹீரோயினாக நடிக்க மறுத்த நயன்தாரா..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.