"என்னுடைய அந்த உறுப்பு உடைந்து விட்டது..." - விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..! - சோகத்தில் ரசிகர்கள்..!


உன்னைத்தேடி, வெற்றி கொடிகட்டு, திருட்டு பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா. அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. 
 
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்... பாடலில் நடனம் ஆடி பிரபலமானார். ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 
 
10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். 
 
இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் இவருக்கு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. 
 
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தும் இவர் சைக்கிளிங், உடற்பயிற்சி , யோகா என தினமும் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று சைக்கிளிங் செல்லும் போது விபத்திற்குள்ளாகி உடலில் சில இடங்களில் காயம் அடைந்துள்ளார் மாளவிகா.
 
இது குறித்து மாளவிகா கூறியுள்ளதாவது. சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கினேன். என்னுடைய, கை விரல் உடைந்து விட்டது. நான் ஒரு போர் வீராங்கனை. மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

"என்னுடைய அந்த உறுப்பு உடைந்து விட்டது..." - விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..! - சோகத்தில் ரசிகர்கள்..! "என்னுடைய அந்த உறுப்பு உடைந்து விட்டது..." - விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..! - சோகத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.