"சமந்தாவிற்கு கோயில் கட்டிய ரசிகர்கள்.." - சிலையை பாத்திங்கனா தூக்கி வாரி போட்ரும்..!

 
திரைப்பட நடிகைகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகைகள் பலரும் 50 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள். 
 
ஆனால், தென்னிந்திய நடிகைகள் அதிகபட்சமாக 15 மில்லியன் பாலோயர்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். இதுவரையில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகையாக காஜல் அகர்வால் உள்ளார். அவருக்கு 17.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். 
 
அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங் 16.2 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் 15.7 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 
 
தற்போது நடிகை சமந்தா 15 மில்லியன் பாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இளம் முன்னணி நடிகைகளான ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோர் 12 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளனர். 
 
திருமணமான பின்னும் சமந்தா தனக்கான இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படத்திலும், தெலுங்கில் விரைவில் 'சாகுந்தலம்' படத்திலும் நடிக்க உள்ளார்.
 


இந்நிலையில், சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை சமந்தா என்று சொன்னால் சமந்தாவே நம்ப மாட்டார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

"சமந்தாவிற்கு கோயில் கட்டிய ரசிகர்கள்.." - சிலையை பாத்திங்கனா தூக்கி வாரி போட்ரும்..! "சமந்தாவிற்கு கோயில் கட்டிய ரசிகர்கள்.." - சிலையை பாத்திங்கனா தூக்கி வாரி போட்ரும்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.