நயன்தாரா மேடம் எப்படி தான் இருக்காங்கன்னே தெரியல..! - நடிகை வசுந்தரா கஷ்யாப் பேட்டி..!


தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர போராடிக் கொண்டிருப்பவர் வசுந்தரா கஷாயப். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி பல பட்டங்களை பெற்றார். அதே போல இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.
 
அதன்பின்னரே இவருக்கு தமிழ் சினிமாவல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நெப்போலியன் மற்றும் ஆர்யா நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த வட்டாரம் திரைப்படத்தில் நெப்போலியனுக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவுலகில் வேலைக்கு ஆரம்பித்தார். 
 
அதன்பிறகு உன்னாலே உன்னாலே, காலைப்பணி, பேராண்மை போன்ற பல படங்களில் உடனடியாக நடித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்த இவரை 2010ஆம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் நடிகை வசுந்தரா காஷ்யப். 
 
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மீண்டும் தமிழ் சினிமா உலகில் சிறப்பாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சீனு ராமசாமியின் கண்ணேகலைமானே என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
கடந்த ஒரு சில படங்களில் தற்போது நடித்து கொண்டு வருகிறார் வசுந்தரா. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் வசுந்தரா.
 
அதில் அவர் பேசுகையில், ஒரு பெண் சினிமா இண்டஸ்ரிக்குள் நீண்ட காலம் இருப்பது மிக கடினம். ஏன் இருக்கவே முடியாது என்று கூட சொல்லலாம். நயன்தாரா மேம் எல்லாம் எப்படி தான் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நயன்தாரா மேடம் எப்படி தான் இருக்காங்கன்னே தெரியல..! - நடிகை வசுந்தரா கஷ்யாப் பேட்டி..! நயன்தாரா மேடம் எப்படி தான் இருக்காங்கன்னே தெரியல..! - நடிகை வசுந்தரா கஷ்யாப் பேட்டி..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.