"இப்போ தான் நெகு நெகுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்க.." - உடல் எடை கூடி பழைய லுக்கில் கீர்த்தி சுரேஷ்..!


ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கோடு போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், பின், மெல்ல மெல்ல பட்டும் படாமலும் கவர்ச்சி கொடியேற்றினார். இப்போது பாலிவுட்டிற்கு சென்றுள்ள அவரை, முதல் படத்திலேயே அசைவ நடிகையாக்கி விட்டனர். 
 
பாலிவுட் நடிகையருக்கு ஈடுகொடுக்க, தன் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள கீர்த்தி சுரேஷ், 'இந்தியில், வெற்றி பெற்ற பின், மீண்டும் தமிழ் சினிமாவை கவர்ச்சி சுனாமியாக தாக்குவேன்...' என, கூறி வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். 
 
தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. 
 
இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
 
தற்போது, தமிழில் ‘அண்ணாத்த, சாணிக்காயிதம்’ என்ற படங்களிலும், தெலுங்கில் ‘குட்லக் சகி, ரங்தே, ஐனா இஷ்டம் நுவ்வு, சரக்குவாரி பாட்டா’ என்ற படங்களிலும், மலையாளத்தில் ‘மரக்காயர்’ படத்திலும் நடித்து வருகிறார். 
 
பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்குறேன் என்று கூறி உடல் எடை குறைத்து பிகினியில் கூட நடிக்க தயார் என்ற நிலையில் இருந்தார் அம்மணி. ஆனால், ஒல்லியாக இருந்த கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்களுக்கு அவரை சுத்தமாக பிடிக்காமல் போனது. 
 
 
எங்களுக்கு பஸ்ட்டியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தான் வேண்டும் எனகருத்து தெரிவித்து வந்தனர். பாலிவுட்டை கலக்கலாம் என்ற ஆசையில் இருந்தவருக்கு தமிழ் ரசிகர்களின் இந்த கருத்து அவரது அடி வயிற்றை கலக்கி விட்டது போல. 
 
 
இதனால், தற்போது மீண்டும் உடல் எடை ஏற்றி பொசு பொசுவென மாறியுள்ளார். தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள், இப்போ தான் நெகு நெகுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இப்போ தான் நெகு நெகுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்க.." - உடல் எடை கூடி பழைய லுக்கில் கீர்த்தி சுரேஷ்..! "இப்போ தான் நெகு நெகுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்க.." - உடல் எடை கூடி பழைய லுக்கில் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.