நின்று போன திருமணம் - நடிகை பூஜா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..!


தமிழில் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவர் தல அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 
 
நான் கடவுள் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் பூஜா. நடிகை பூஜா 1984ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். 
 
இதில் விசேஷம் என்னவென்றால், இவரது அப்பா ஒரு கன்னடர், அம்மா ஒரு சிங்களர், கணவர் ஒரு தமிழர். தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார்.
 

நின்று போன முதல் திருமணம்

இவருக்கும் அந்த நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் 2014-ம் நிச்சயம் நடந்தது. ஆனால், ஒரு ஆண்டிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நடக்காமலேயே இருவரும் பிரிந்தனர்.​
 
கடைசியாக 2015ஆம் ஆண்டு கடவுள்பாதி மிருகம்பாதி என்ற தமிழ் படத்தில் நடித்தார். 
 
அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் இலங்கை தமிழ் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் சிங்கள மொழியில் நடித்து வருகிறார் பூஜா. 
 
 
கடைசியாக பத்தினி என்ற சிங்கள மொழி படத்தில் நடித்தார். இது ‘கண்ணகியின்’ வாழ்க்கை வரலாற்று படமாகும்.


தற்போது, தனியார் நிகழ்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்தி வழங்கி வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
 
 

நின்று போன திருமணம் - நடிகை பூஜா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..! நின்று போன திருமணம் - நடிகை பூஜா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 25, 2021 Rating: 5
Powered by Blogger.