"டஸ்க்கி குயின்... கிளமார் பாம்..." - துளி மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..!


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உட்பட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கையில் அரை டஜன் தமிழ் படங்கள் உள்ளன. 
 
மேலும் இவர் தெலுங்கிலும் பிஸியான நடிகையாகி விட்டார். இவர் ‘மகாநதி’ படத்துக்குப் பின் தெலுங்கிலும் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்தவிட்டார். தெலுங்கிலும் தற்போது கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்கள் படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். 
 
தற்போது நீண்ட ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
 
ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 
 
இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது. கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்ததால் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். அதனை அடித்து நொறுக்கும் வகையில் திடீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். 
 
 
தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே உள்ளன. என்னதான் ஆரம்பத்தில் நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என சத்தியம் செய்து வந்தாலும் சினிமாவின் சூழ்நிலை அவர்களை கவர்ச்சி பாதைக்கு இழுத்து வந்து விடும். 
 
 
அந்த வகையில், தற்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், துளி மேக்கப் இல்லாமல் பொசு பொசுவென இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 


 
இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"டஸ்க்கி குயின்... கிளமார் பாம்..." - துளி மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! "டஸ்க்கி குயின்... கிளமார் பாம்..." - துளி மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 13, 2021 Rating: 5
Powered by Blogger.