"என் தங்கம் நயன்தாரா.. வேறு ஒருவருடன் இணைவது பற்றி கவலைப்படவில்லை.." - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..!
தமிழ் சினிமாவின் முக்கிய ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் மற்ற ஜோடிகளுக்கும் ரிலேஷன்ஷிப் இலக்குகளை நிர்ணயித்து வருகிறார்கள்.
இவர்கள் தற்போது ரவுடி பிக்சர்ஸ் என்ற தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், 'ராக்கி', 'கூழாங்கல்' மற்றும் 'நெற்றிக்கண்' ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறார்கள்.
அதோடு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா வேறொருவருடன் இணையும் போது முதன்முறையாக தனக்கு பொஸசிவ் பிரச்னை இல்லை, அதற்குக் காரணம் விஜய் சேதுபதி தான் என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
"முதல் முறையாக எனது தங்கம் நயன்தாரா வேறு ஒருவருடன் இணைவது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். தனது மற்ற கதாநாயகி சமந்தாவைப் பற்றி குறிப்பிட்ட விக்கி, "நீங்கள் அருமை .. இந்த பார்ட்டியில் உங்களை வழி நடத்தியது ஃபன்னாக இருந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.
'காத்து வாக்குலா ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின விருந்தாக வெளிவருகிறது.
"என் தங்கம் நயன்தாரா.. வேறு ஒருவருடன் இணைவது பற்றி கவலைப்படவில்லை.." - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..!
Reviewed by Tamizhakam
on
February 13, 2021
Rating:
