பேராண்மை படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது..? - ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

 
தமிழில் 'காதல்' படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்து பிரபலமான, சரண்யா நாக் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார். 
 
சென்னையில் பிறந்து வளர்ந்து , நடிகர் பார்த்திபன், தேவயானி, அஜித் உள்ள பல பிரபலங்கள் நடித்த 'நீ வருவாய் என' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
ஒன்பதாம் வகுப்பு படித்தபோது , ​​ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாலாஜி சக்திவேலிடம் அறிமுகப்படுத்த, காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சரண்யாவிற்கு கிடைத்தது. 
 
முதல் படமான 'காதல்' படத்தில் சரண்யா நாக் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம், சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது. 
 
இதனை தொடர்ந்து, பேராண்மை திரைப்படத்தில் அஜிதா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
 
 
தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பல சிக்கல்களால் வெளியுலகத்துடனான தனது தொடர்பை துண்டித்து விட்டு, நான்கரை வருடத்தை வீட்டு சிறையில் கழித்திருக்கிறார் நடிகை சரண்யா நாக்.
 
 
ஹார்மோன் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட உடல் எடையை குறைக்க தற்போது தீவிர முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம் சரண்யா நாக்.  
எனவே விரைவில், எடை குறைந்தபின் நடிக்கவும் முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராண்மை படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது..? - ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! பேராண்மை படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது..? - ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.