"பாத்து.. பாத்து.. பலூன் வெடிச்சுட போகுது.." - தமன்னா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!
தனது பதினைந்தாவது வயதில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. பின் சிறிது காலம் கழித்து தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் மற்றும் தமிழில் கேடி என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் தமன்னா.
இந்த இரண்டு படங்களும் சுமார் ஆகவே இருந்தது.பின் இரண்டு மொழி ரசிகர்களுக்கு நன்கு அவரை அறிய வைத்த படம் தான் பாலாஜி சக்திவேலின் தமிழில் கல்லூரி மற்றும் தெலுங்கில் ஹாப்பி டேஸ்.
இப்படம் மிகவும் பேசப்பட்டது மற்றும் தமன்னாவின் நடிப்பு பிரபலமானது. இப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
பின்னர் தமிழில் வெளியான கண்டேன் காதலை படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவரின் திரை வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்யுடன் சுறா , ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்தார்.
இவ்விரண்டு படங்களும் சுமார் ஆகவே இவருக்கு அமைந்தது. அதே வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் இவருக்கு வெற்றியை தேடிதந்தது.
2015 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். தற்போது பல நடிகைகளை போல அவருடைய போட்டோஷுட் புகைப்படங்களும் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன.
கொரோனா ஊரடங்கில் உடல் எடை கூடி குண்டாகி விட்டார் தமன்னா. இந்நிலையில், உடல் எடையை குறைக்க மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், பலூன் மீது ஏறி நின்று சிட் அப்ஸ் போடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பாத்து.. பாத்து.. பலூன் வெடிச்சுட போகுது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"பாத்து.. பாத்து.. பலூன் வெடிச்சுட போகுது.." - தமன்னா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 02, 2021
Rating:
