என் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..!


தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அதனால் இவரது பெயர் கயல் ஆனந்தி என்று மாறியது. ஆனால் உண்மையான பெயர் ரக்‌ஷிதா. 
 
தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வெற்றிமாறன் தயாரித்த பொறியாளன், பிரபு சாலமனின் கயல் ஆகிய படங்களின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். 
 
அந்தப் படத்தைத் தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.மாரி செல்வராஜ் இயத்தில் 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது. 
 
கடந்த மாதம் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவர் முதன்மை நாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19-ந்தேதி வெளியாகிறது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார். 
 
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். 
 
 
பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. 
 
ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது. 
 
 
என்னுடைய திருமணம் காதல் திருமணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். 
 
எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.

என் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..! என் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..! Reviewed by Tamizhakam on February 10, 2021 Rating: 5
Powered by Blogger.