"கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வச்சவன்..." - ஊஞ்சலில் படுத்தபடி ஆண்ட்ரியா போஸ் - வைரல் போட்டோ..!


மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை போன்ற படங்களில் நடித்து உள்ளார் நடிகை ஆண்ட்ரியா அதுமட்டுமல்லாமல் ' தரமணி ' படம் அவருக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தது. 
 
இவர் நடிப்பு மட்டுமல்லாது பாட்டு பாடும் திறமையும் உள்ளது சில தமிழ்ப் பாடலும் பாடியுள்ளார்.விஸ்வரூபம் படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் மேலும் இவர் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார்.
 
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. 
 
நடிப்பது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுதல், பாடுதல் மற்றும் இசையமைப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். வடசென்னை படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்ட நிலையில் இப்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்நிலையில் நேற்று இவரது அடுத்த படமான 'கா' படம் பூஜை போட்டு துவக்கப்பட்டது. அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கும் இப்படத்தில், ஆண்ட்ரியா ஒரு புகைப்பட கலைஞராக நடிக்க, சின்ன கவுண்டர் வில்லன் சலீம் கவுஸ், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
 
முழுக்க முழுக்க இப்படம் காடுகளை பின்னணியாக கொண்டே படமாக்க படவுள்ளது. நேற்று வெளியான இப்படத்தின் புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் ,குழம்பி போய் உள்ளனர்.
 
இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ள ஆன்டிரியா அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய அழகை பரிமாறி வருகிறார். அந்த வகையில், தன்னுடைய பாதங்கள் தெரியும் படி ஊஞ்சலில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், கட்டை விரலை விட பக்கத்து விரல் நீளமாக இருக்கு.. கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கொடுத்து வச்சவன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

"கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வச்சவன்..." - ஊஞ்சலில் படுத்தபடி ஆண்ட்ரியா போஸ் - வைரல் போட்டோ..! "கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வச்சவன்..." - ஊஞ்சலில் படுத்தபடி ஆண்ட்ரியா போஸ் - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.