காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்...!

 
நடிகர் அருண் விஜய்யுடன் கைக்கோர்த்துள்ளார் இயக்குநர் ஹரி. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'அருண் விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
 
படத்தின் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட்டை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, அடுத்த மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர், நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.
 
சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வாணி போஜனை தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். 
 
மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான கமல் உடன் இந்தியன் 2, மாபியா படத்தை தொடர்ந்து அருண் விஜய் உடன் ஒரு படம், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். 
 
தற்போது தெலுங்கிலும் கால் பாதித்துள்ள பிரியா பவானி சங்கர், அகம் பிரமாஸ்மி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அம்மணி விரைவில் தென்னிந்திய அளவில் முன்னணி நாயகியாக வர வாய்ப்புள்ளது. 
 
நயன்தாராவைப் போலவே நடிகை பிரியா பவானி சங்கரும் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் தான். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் காதல் என்று கிளம்பிய வதந்தி தீயாய் பரவ, தன்னுடைய நிஜ காதலரான ராஜ்வேல் என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 
 
தற்போது ராஜ்வேல் உடன் காதல் மலர்ந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதால், 2011ம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய போட்டோவையும் இணைத்து தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 


 
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் நயன்தாராவையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்...! காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்...! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.