காலங்காத்தால ஃபுல் மேக்கப் போட்டுக்கிட்டு துப்புரு துப்புருன்னு ஓடும் அஞ்சலி - என்னவா இருக்கும்...!
நடிகை அஞ்சலி ஜீவாவுடன் இணைந்து 2007 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த திரைப்படம் கற்றது தமிழ் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இப்படத்தினை தொடர்ந்து அங்காடிதெரு,எங்கேயும் எப்பொழுதும், கலகலப்பு போன்ற சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சில காலங்களில தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் அடைக்கலம் புகுந்தார். பிறகு திடீரென்று மாயமான அஞ்சலி எங்கே போனார், என்ன ஆனார்? என்பது மர்மமாக இருந்தது.
அமெரிக்கா சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபருடன் ரகசியமாக குடித்தனம் நடத்துவதாகவும் தகவல் வெளியானது.
இருப்பினும் தற்போது அவர் திசை திருப்பிய மீண்டும் நடிக்க வந்துள்ளார்.சூர்யாவுடன் சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய அஞ்சலிக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் சசி உடன் இணைந்து நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்து நல்லதொரு வரவேற்பை பெற்றார். இப்படத்தினை தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார்.
தற்போது, ஆனந்த பைரவி, வக்கீல் சாப் என்ற இரண்டு தெலுங்கு படங்களிலும், பூச்சாண்டி என்ற ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், மலைப்பகுதி ஒன்றில் அதிகாலை நேரத்தில் ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு கிடுகிடுவென ஓடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், காலங்காத்தால ஃபுல் மேக்கப் போட்டுக்கிட்டு துப்புரு துப்புருன்னு எங்க ஓடுறாங்க..? என்னவா இருக்கும் என கமென்ட் அடித்து வருகிறார்கள்.
காலங்காத்தால ஃபுல் மேக்கப் போட்டுக்கிட்டு துப்புரு துப்புருன்னு ஓடும் அஞ்சலி - என்னவா இருக்கும்...!
Reviewed by Tamizhakam
on
February 11, 2021
Rating:
