அடப்பாவிங்களா..? - கட்ட கடைசியா G.P.முத்துகிட்டயும் அந்த கேள்வியை கேட்டுட்டீங்களேடா..! - வைரல் வீடியோ..!


ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். 
 
அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. 
 
இத்திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று படக்குழு தெரிவித்திருந்தாலும் ரசிகர்கள் விட்டபாடில்லை. 
 
இந்நிலையில் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக சந்தித்த ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் பற்றி கேட்டுள்ளார். இதுகுறித்து அஜித்தை சந்தித்த புகைப்படத்துடன் ட்விட்டரில் எழுதியிருந்தார் அந்த ரசிகர்.
 
அவர் கூறியதாவது, “நேற்று மாலை வலிமை செட்டில் தல அஜித்தை சந்திதேன். 10 நிமிடம் பேசினோம். அப்போது வலிமை அப்டேட் குறித்து கேட்டதற்கு பிப்ரவரி மாதம் அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்றார். தனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
 
ஆனால்,இதுவரை எந்த அப்டேட்டும் வராத நிலையில்அஜீத் ரசிகர் ஒருவர் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் என்ன கேட்டுள்ளார் என்று நீங்களே பாருங்க.
 அடப்பாவிங்களா..? - கட்ட கடைசியா G.P.முத்துகிட்டயும் அந்த கேள்வியை கேட்டுட்டீங்களேடா..! - வைரல் வீடியோ..! அடப்பாவிங்களா..? - கட்ட கடைசியா G.P.முத்துகிட்டயும் அந்த கேள்வியை கேட்டுட்டீங்களேடா..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.