"Myntra லோகோ பஞ்சாயத்து.." - அடப்பாவிங்களா..? - பசங்க,.. நாங்களே அப்படி பாக்கலடா யப்பா..! - இது தான் காரணமா..?
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக, பிரபல் ஆன்லைன் ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனம் தன்னுடைய லோகோவை மாற்ற முன்வந்து உள்ளது.
மும்பையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர், மைந்த்ராவின் லோகோ, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறி, மாநிலத்தின் இணைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துஉள்ளார்.
இதையடுத்தே, மைந்த்ரா நிறுவனம், தன்னுடைய லோகோவை மாற்றிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. ‘அவெஸ்டா’ அறக்கட்டளையை சேர்ந்த, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய சமூக ஆர்வலர் நாஸ் படேல்.
இவர், கடந்த டிசம்பரில், மைந்த்ராவின், லோகோ குறித்து புகார் அளித்தார். மேலும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவர் இந்த விஷயத்தை எடுத்துச் சென்றார்.
மும்பை போலீசாரும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக லோகோ இருப்பதாக கருதி, புகாரை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ‘மைந்த்ரா’ நிறுவனத்தின் அதிகாரிகள், இவ்விவகாரம் குறித்து போலீசாரை சந்தித்து, லோகோவை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தனர்.
தற்போது புதிய, லோகோ தேர்ந்தெடுக்கப்பட்டு, அச்சுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக, மைந்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும், மைந்த்ரா.
வெயிட்.. இப்போது என்ன கெட்டுவிட்டது என லோகோவை மாத்துறாங்க என்று பலரும் குழம்பி போனார்கள். மேலும், இணைய வாசிகள் பலரும் பல லோகோ-களை எடுத்து இதையும் மாற்ற வேண்டும் என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வந்தனர்.
அதாவது, மைந்த்ராவின் பழைய லோகோவில் உள்ள முதல் எழுத்தான "M" ஒரு பெண் ஆடைகள் இன்றி படுத்திருப்பது போல உள்ளதாம். இதனை மாற்றத்தான் அந்த பெண் சமூக ஆர்வலர் புகார் கொடுத்துள்ளாராம்.
இதனை அறிந்த இணைய வாசிகள், இந்த லோகோவிற்கு பின்னால் இப்படிவிஷயம் இருக்கிறது என சத்தியமா எங்களுக்கு இப்போ தான் தெரிய வந்தது. பசங்க,.. நாங்களே அப்படி பாக்கலடா யப்பா..! என கூறி வருகிறார்கள்.
மேலும், அழுக்கான எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் தான் அப்படி தெரிய வாய்ப்புள்ளது எனவும் ஒரு பெண் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
I mean what's wrong with this logo? Only a person with dirty mind could see such lame things.#MyntraLogo pic.twitter.com/sgqcUD6dc1
— Eeshi Pancholi (@PancholiEeshi) January 30, 2021
இன்னொரு இணையவாசியோ.. மைந்தரா லோகோ பெண்களுக்கு எதிராக இருக்குதுன்னா.. LUPIN லோகோ ஆண்களுக்கு எதிராக இருக்கு.. அதையும் மாற்றுங்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
if @myntra logo is offensive towards women then @LupinGlobal logo is also offensive towards men. Please change it.🤡#MyntraLogo pic.twitter.com/zIp79kEPaa
— Ishan Khandelwal (@Ishan2weets) January 30, 2021
"Myntra லோகோ பஞ்சாயத்து.." - அடப்பாவிங்களா..? - பசங்க,.. நாங்களே அப்படி பாக்கலடா யப்பா..! - இது தான் காரணமா..?
Reviewed by Tamizhakam
on
February 01, 2021
Rating:
