"கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.. குழந்தை எங்கம்மா..?." - VJ பாவனா வெளியிட்ட புகைப்படம் - மனம் கணத்த ரசிகர்கள்..!


விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என கலக்கி வரும் பாவனா பாலகிருஷ்ணன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் பாவனா பாலகிருஷ்ணன். 
 
டிடி நீலகண்டன், பிரியங்காவை போலவே இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் எப்போதுமே டச்சில் உள்ளார். 
 
வித்தியாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வதில் பாவனாவிற்கு தனி அலாதி எனலாம். இவ்வாறு இளைஞர்கள் மனதை கவர்ந்த பாவனாவிற்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா. 
 
35- வயதான பாவனா மும்பை தொழிலதிபரான நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் முடித்து பத்து வருடங்கள் முடிந்த நிலையில் மக்களிடையே இன்னும் இளமையாக வலம் வருகிறார் பாவனா.
 

கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.. குழந்தை எங்கம்மா..?

 
இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் ஒரு ட்ரூ ஆர் ஃபால்ஸ் கேள்வி பதில் விளையாட்டை விளையாடியுள்ளார் பாவனா பாலகிருஷ்ணன். அப்போது அவரிடம் உங்களுக்கு திருமணம் ஆனதா என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இந்த ஆண்டு டிசம்பர் வந்தால் எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடையப் போகுது எனக் கூறி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
 

மேலும், உங்களுக்கு குழந்தை உள்ளது. சரியா..? தவறா..? என்ற கேள்விக்கு தவறு என்ற பதிலளித்துள்ள பாவனா. எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று தன்னுடைய வளர்ப்பு நாயுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிலை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மனம் கனத்து போயுள்ளனர்.

"கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.. குழந்தை எங்கம்மா..?." - VJ பாவனா வெளியிட்ட புகைப்படம் - மனம் கணத்த ரசிகர்கள்..! "கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு.. குழந்தை எங்கம்மா..?." - VJ பாவனா வெளியிட்ட புகைப்படம் - மனம் கணத்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.