கமல் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? - 19 வயதில் ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக கூறிய ஸ்ருதி..!


தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். 
 
வெளிநாட்டுகாரர் ஒருவரை காதலித்து வந்த அவர் தன்னுடைய காதலை முறித்துகொண்டார். காதல் தோல்விக்கு பிறகு சிலகாலம் தனிமையில் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 
 
அவரது நடிப்பில் தற்போது தெலுங்கில் கிராக் என்ற படம் உருவாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் லாபம் படம் சமீபத்தில் தான் வெளியாகி வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது. விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 
தன்னுடைய 14-வது வயதிலேயே கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் ஒரு சிறிய ரோலில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார் ஸ்ருதிஹாசன். கடந்த, 2009ம் ஆண்டு "லக்" எனும் பாலிவுட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் தனது 19வது வயதில் நிகழ்ச்சி ஒன்றில் பேச அழைத்த போது தான் மிகவும் நடுங்கிப் போனதாகவும் வெளிப்படையாக ஸ்ருதிஹாசன் பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

கமல் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? - 19 வயதில் ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக கூறிய ஸ்ருதி..! கமல் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? - 19 வயதில் ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக கூறிய ஸ்ருதி..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.