"50 வயதிலும் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்..." - ஃபுல் சைஸ் போட்டோ போடுங்க என கெஞ்சும் ரசிகர்கள்..!

 
1983 ம் ஆண்டு, தன்னுடைய 13 வது வயதில் 'வெள்ளை மனசு' திரைப்படம் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கிய ரம்யா கிருஷ்ணன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
திருமணத்திற்கு பின், வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரை சீரியல் ஹீரோயினாக மாறி, தங்கம், வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார். இவருடைய திரையுலக பயணத்தில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும், சூப்பர் ஸ்டாருடன் நடித்த 'படையப்பா' படத்தில் இவர் நடித்த நீலாம்பரி வேடம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளது.
 
இதை தொடர்ந்து, 'பாகுபலி' படத்திலும் ராஜா மாதா சிவகாமி தேவியாக நடித்து, உலக அளவில் பிரேமலமானார். 50 வயதை எட்டியும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தால், கவர்ச்சி வேடங்களிலும் துணிந்து நடிப்பவர் ரம்யா கிருஷ்ணன். 
 
இவருக்கு சினிமா மீதும் நடிப்பின் மீதும் உள்ள இந்த ஈடுபாடு தான் ரசிகர்கள் மனத்தில் இ வரை நிலை நிறுத்தியுள்ளது.இந்நிலையில் கடந்த, செப்டம்பர் 15 ஆம் தேதி ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். 
 
 
இதற்க்கு ரசிகர்கள், பிரபலங்கள், மீடியாக்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரம்யா கிருஷ்ணனும் குடும்பத்தினருடன் இரவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 


இந்நிலையில், நீச்சல் உடை அணிந்திருக்கும் அவர் தன்னுடைய முகம் மட்டும் தெரிவது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஃபுல் சைஸ் போட்டோ போடுங்க.. ஃபுல் சைஸ் போட்டோ போடுங்க என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

"50 வயதிலும் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்..." - ஃபுல் சைஸ் போட்டோ போடுங்க என கெஞ்சும் ரசிகர்கள்..! "50 வயதிலும் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்..." - ஃபுல் சைஸ் போட்டோ போடுங்க என கெஞ்சும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.