"என்ன பொண்ணு டா.. - செம்ம ஹாட்..." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், செம்ம லவ்வோடு கமெண்ட் செய்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக தனது தந்தையின் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. 
 
ச.வந்த வேகத்தில் வாரிசு நடிகர் - நடிகைகள் திரையுலகிற்கு டாட்டா காட்டி விட்டு சென்ற நிலையில்... ஆரம்பத்தில் தடு மாறினாலும், நிலையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இந்தியிலும் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாக இருக்க அந்த படத்தில் இருந்து காரணங்களால் நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது. 
 
மகாநடி மாபெரும் வெற்றி பெற்றதால் ஹீரோக்களுடன் ஜோடி போடும் படங்களில் மட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 
 
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினி முருகன்', மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களும், அடுத்தடுத்து இவரை விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மாற்றியது.
 
முன்னணி நடிகைகள் பட்டியலில் இருக்கும் இவரது, கால் ஷீட்டுக்கு பல நடிகர்கள் வெயிட்டிங். எனினும் அம்மணி நயன்தாரா பாணியில், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி பிடித்து நடித்து வருகிறார்.
 
 
அந்த வகையில் வெளியான பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்றதை தொடர்ந்து குட்லக் சகி வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் நடிகர் ஆதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.இந்த நிலையில் கீர்த்தி கேண்டில் லைட்டில் புத்தகம் வாசிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


 
இதனை பார்த்த ரசிகர்கள், சூரியன் வெளிச்சத்தை உள்வாங்கி மிளிரும் நிலா போல மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை உள்வாங்கி உங்கள் முகம் மிளிர்கிறது. என்ன பொண்ணுடா.., நெருப்பின் சூட்டில் மெழுகு உருவதை விட, உங்களின் சூட்டில் நாங்கள் உருகுகிறோம் என்று உருகி உருகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

"என்ன பொண்ணு டா.. - செம்ம ஹாட்..." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - தீயாய் பரவும் புகைப்படம்..! "என்ன பொண்ணு டா.. - செம்ம ஹாட்..." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.