என்னது... இந்த ஹிட் பாடல் எல்லாம் பாடியது தீதிக்‌ஷா-வா..? - அதிர்ச்சியான எஞ்சாயி எஞ்சாமி ரசிகர்கள்..!


பாடகி தீ. இவருடைய இயர் பெயர்  தீதிக்‌ஷா வெங்கடேஷன் என்பதாகும். 22 வயதே ஆன இவர் பாடி, நடித்துள்ள 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மார்ச் 7 ஆம் தேதி அன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 
 
இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதாக பிரபல நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்து, இந்த பாடலை பாடி நடித்துள்ள தீ மற்றும் அறிவு ஆகியோரை பாராட்டியுள்ளார். 
 
'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் வரிகளை அறிவு எழுதி, தீ யுடன் சேர்ந்து பாடியுள்ளார். மகளின் முதல் இண்டிபெண்டெண்ட் ஆல்பத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
சந்தோஷ் நாராயணனின் வழக்கமான பாடல்களை போல் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த பாடலின் பாடலாசிரியர் மற்றும் ராப் சிங்கருமான அறிவு மற்றும் தீயின் காம்பினேஷன் வேற லெவல். 
 

அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை இந்த வரிகள் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 
ராப், மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்த காம்போவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. தி - அறிவு இந்த பாடலை பாடியுள்ளது அல்டிமேட் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
 
இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள பாடகி தீ ஏற்கனவே பல ஹிட் பாடல்களை தமிழில் பாடியுள்ளார். ஆனால், இப்போது தான் இதனை அறிந்த ரசிகர்கள் பலர் என்னது இந்தஹிட் பாடல்களை பாடியது தீதிக்சாவா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இவர் பாடிய பாடல்களில் முக்கால் வாசி பாடல்கள் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தவை என்பது குறிப்பிட தக்கது.
 • 2013   -  "டிஸ்கோ வுமன்"     பீட்சா II: வில்லா   
 • 2014   -  "ஏன்டா மாப்பிளை"     குக்கூ   
 • 2014   -  "நான் நீ"     மெட்ராஸ்   
 • 2016   - "ஏ சண்டகாரா" & "உசுரு நரம்புலே"     இறுதிச்சுற்று    
 • 2016   - "துஷ்டா"     இறைவி     சந்தோஷ் நாராயணன்      
 • 2018   - "கண்ணம்மா கண்ணம்மா"     காலா    
 • 2018   - "மாடிலா நிக்குரா மான்குட்டி"     வட சென்னை       
 • 2018   -  "ரவுடி பேபி"     மாரி 2    
 • 2019   -  "வானில் இருள்"     நேர்கொண்ட பார்வை    
 • 2019   -  "மனமெங்கும் மாய ஊஞ்சல்"     ஜிப்சி         
 • 2020   - "காட்டுபயலே"     சூரரைப் போற்று  
 • 2021   - "எஞ்சாயி எஞ்சாமி"     எஞ்சாயி எஞ்சாமி         

என்னது... இந்த ஹிட் பாடல் எல்லாம் பாடியது தீதிக்‌ஷா-வா..? - அதிர்ச்சியான எஞ்சாயி எஞ்சாமி ரசிகர்கள்..! என்னது... இந்த ஹிட் பாடல் எல்லாம் பாடியது தீதிக்‌ஷா-வா..? - அதிர்ச்சியான எஞ்சாயி எஞ்சாமி ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.