"விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.." - நடிகை திவ்யா உன்னி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

 
மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் திவ்யா உன்னி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த திவ்யா உன்னி, டாக்டர் சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். 
 
இதனிடையே கடந்த இருவரிடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார் திவ்யா உன்னி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் விவாகரத்து பெற்று தன்னுடைய குழந்தைகளை தன்னுடனே அழைத்து வந்துவிட்டார்.
 
பிறகு 2018-ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார். திவ்யா உன்னிக்கு ஏற்கனவே அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3வது முறையாக கர்ப்பமானார். 
 
முதல் கணவருடன் திவ்யா உன்னி
 
திவ்யா உன்னிக்கு அவரது இரண்டாவது கணவர் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய போட்டோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னி, கடந்த 14ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 
 
அந்த குழந்தைக்கு ஐஸ்வர்யா என பெயர் வைத்துள்ள திவ்யா உன்னி, குழந்தையுடன் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அன்பான கணவர், அழகான 3 குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கும் திவ்யா உன்னிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

இரண்டாம் கணவருடன் திவ்யா உன்னி

பரதநாட்டியத்தை முறையாக கற்றுள்ள இவர் அவ்வப்போது மேடை நிகழ்சிகளில் அரங்கேற்றம் செய்து வருகிறார். தவிர, முழு நேர குடும்ப தலைவியாக குடும்பத்தை பார்த்துக்கொண்டு வருகிறார்.

"விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.." - நடிகை திவ்யா உன்னி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! "விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.." - நடிகை திவ்யா உன்னி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Reviewed by Tamizhakam on March 10, 2021 Rating: 5
Powered by Blogger.