"ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - தோட்டத்தில் பூத்த பருவ மொட்டு போல நயன்தாரா - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். 
 
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
 
இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர். அப்போது ஐதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார். 
 
ஐதராபாத் விமான நிலையத்தில் காதலி நயனை கரம் பிடித்து அழைத்து வந்த விக்னேஷ் சிவனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. திரையுலகில் நுழைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. 
 
தமிழ்த் திரையுலகுக்கு வந்து 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களில்தான் தன் சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்தார் என்றாலும், இடையில் கவர்ச்சிப் பதுமையாக வந்து போனாலும், பிறகு தன் அனுபவங்கள் மூலமாக, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய தவறுகளை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு நாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார் நயன்தாரா. 
 
 
இது தாமதமான மனமாற்றம்தான் என்றாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் பெண் மையக் கதாபாத்திரங்களே அற்றுப்போயிருந்த காலத்தில், நயன்தாராவின் திரைப்படங்கள் பெண் மைய சினிமா ட்ரெண்டை மீண்டும் தொடங்கி வைத்தது எனலாம். 
 
'கிளாமர் டால்' என்ற அடைமொழியிலிருந்து 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற புகழ் கிடைத்தது வரை நயன்தாராவின் பயணம் நெடியது. 'இனி அவ்வளவுதான்' எனப் பலரும் கணித்தபோது, மீண்டும் எழுந்து மிக அழுத்தமான திரைப்படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார் நயன்தாரா.
 
 
இப்படி சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே நீண்ட காலம் நிலைக்க முடியும் என்பதை உடைத்தெறிந்து வெற்றி நடை படுபவர் நடிகை நயன்தாரா. அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நயன்தாரா தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் நாள் முழுக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.

"ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - தோட்டத்தில் பூத்த பருவ மொட்டு போல நயன்தாரா - உருகும் ரசிகர்கள்..! "ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - தோட்டத்தில் பூத்த பருவ மொட்டு போல நயன்தாரா - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 28, 2021 Rating: 5
Powered by Blogger.