"நயன்தாராவின் வளர்சிக்கு காரணம் இது தான்.." - விட்டு விளாசிய "மாஸ்டர்" பட நடிகை..! - கடுப்பில் நயன் ரசிகர்கள்..!


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரபல நடிகையால் தாக்கப்பட்டுள்ளார். இவரை பற்றி நடிகை ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து, நயன்தாராவின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. 
 
கடைசியாக இவர் "மாஸ்டர்" படத்தில் வில் வித்தை பயிற்றுவிக்கும் ஆசிரியையாக நடித்திருந்தார். இவர், நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். 
 
அதிலும் வட சென்னை படத்தில் ஆடையில்லாமல் இவர் நடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
பிசாசு 2 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆண்ட்ரியா, சர்ச்சை கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘திரையுலகில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 
 

அப்போது தான் இவர் இந்த நடிகரின் படத்தில் நடித்துள்ள நடிகை என்று அடையாளம் காண முடிகிறது. நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. 
 
ஆனால், நான் அப்படி அல்ல, என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. அதே போல் ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டும் தான், நான் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன். ஆனால், அவர்கள் அப்படியல்ல என ஓப்பனாக போட்டுதாக்கியுள்ளார் ஆண்ட்ரியா. இது நயன்தாராவின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

"நயன்தாராவின் வளர்சிக்கு காரணம் இது தான்.." - விட்டு விளாசிய "மாஸ்டர்" பட நடிகை..! - கடுப்பில் நயன் ரசிகர்கள்..! "நயன்தாராவின் வளர்சிக்கு காரணம் இது தான்.." - விட்டு விளாசிய "மாஸ்டர்" பட நடிகை..! - கடுப்பில் நயன் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.