மீண்டும் ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான கீர்த்தி சுரேஷின் கெட்டப் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானனார். 
 
தொடர்ந்து இவர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்திலேயே திறமையான நடிகை என பெயர் எடுத்துவிட்டார். 
 
 
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு இளம் நடிகரான நிதினுடன் ரங் தே படத்தில் நடித்து வருகிறார். மார்ச் 26ந்தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டு யூ/ஏ வழங்கி உள்ளது. 
 
 
மேலும் தற்போது இவர் செல்வராகவனுடன் சாணி காயிதம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார். 


 
அண்மையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் மீண்டும் அவரை இணையத்தில் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

மீண்டும் ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான கீர்த்தி சுரேஷின் கெட்டப் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! மீண்டும் ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான கீர்த்தி சுரேஷின் கெட்டப் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 23, 2021 Rating: 5
Powered by Blogger.