"இந்த போட்டோவ யூ-ட்யூப் சேனல்காரங்க பாத்தா என்னநெனைப்பாங்க..?" - புலம்பும் ரம்யா பாண்டியன் ரசிகர்கள்..!


ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ரம்யா பாண்டியன். 
 
குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என பிஸியாக இருந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.இதில் ஆரியை பிடிக்காது என்று கூறி அவர் குறித்து புறம்பேசி வந்தார் ரம்யா பாண்டியன். இதனால் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்குள்ளானார். 
 
விஷம், விஷப்பாட்டில், என கன்னாபின்னாவென கழுவி ஊற்றினர்.பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சக போட்டியாளரான சோம சேகர் மீது சாஃப்ட் கார்னர் கொண்டிருந்தார். 
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு எதிர்பார்த்தப் படியே ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.ஒரேயொரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ரம்யா பாண்டியன். 
 
இந்த வைரல் போட்டோவிற்கு பிறகுதான் போட்டோஷூட் என்ற வார்த்தை பிரபலமானது என்றும்கூட சொல்லலாம். சாமானிய மக்களையும் வித்தியாச ஆங்கிளில் புகைப்படங்கள் எடுக்கத் தூண்டிய இவருடைய சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது எனலாம். 
 
இந்நிலையில், வேஷ்டி சட்டையில் கடும் கச்சிதமாக மாப்பிள்ளை தோரணையில் ரம்யா பாண்டியனின் நெஞ்சோடு அணைத்தபடி பாலாஜி வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோஸ்கள் தீ போல பரவி வருகின்றன.


பாலாஜியும் ரம்யா பாண்டியனும் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தனர் .அங்கு பெருமளவில் ரசிகர்கள் கலந்து கொண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அந்த கூட்டத்தில் இருந்து ஹீரோ போல ரம்யா பாண்டியனை நெஞ்சோடு அணைத்தப்படியே காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். 
 

யூ-ட்யூப் சேனல் காரங்க என்ன நினைப்பாங்க..

 
ஆனால் அதன்பிறகு இவர்கள் இருவரும் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கின்றனர் .இதனை பார்த்த ரசிகர்கள்இந்த யூ-ட்யூப்சேனல் காரங்க இந்த போட்டோவ பாத்தா என்ன நெனைப்பாங்க.. 
 
 
"பாலாஜி, ரம்யா பாண்டியன் திடீர் திருமணம்.." "மாலத்தீவுகளுக்கு ஹனிமூன் சென்றனர்.." "ரம்யா பாண்டியன் கர்ப்பம்.." "இருவருக்கும் அழகான குழந்தை பிறந்தது.. என்ன குழந்தைன்னு பாருங்க.." என்னும் அளவுக்கு இறங்கி அடிப்பார்களே.. என்று புலம்பி வருகிறார்கள்.

"இந்த போட்டோவ யூ-ட்யூப் சேனல்காரங்க பாத்தா என்னநெனைப்பாங்க..?" - புலம்பும் ரம்யா பாண்டியன் ரசிகர்கள்..! "இந்த போட்டோவ யூ-ட்யூப் சேனல்காரங்க பாத்தா என்னநெனைப்பாங்க..?" - புலம்பும் ரம்யா பாண்டியன் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.