கோடிகளை கொட்டியும் கதைவை இழுத்து சாத்திய கோடம்பாக்கம் - அதிருப்தியில் பிரபல அரசியல் கட்சி..!


தமிழகத்தில் தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை பல தரப்பட்ட கட்சிகள ஜரூராக செய்து வருகின்றன. 
 
அந்த பக்கம், இந்த பக்கம், எந்த பக்கம் திரும்பினாலும் தேர்தல் பற்றிய பேச்சுகளே காதில் விழுகின்றது. ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் இப்படியான பேச்சுக்கள் வருவது வழக்கமானது தான். 
 

காசு தரேன் கருத்து சொல்லு

 
இந்நிலையில், குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவுசெய்யும் படி லட்சம் முதல் கோடிகள் வரை தூக்கிக்கொண்டு பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய நபர்கள் நடிகர் நடிகைகள் வாசலில் நிற்க ஆளை விடுங்கப்பா சாமி என அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல கதவை இழுத்து சாத்தியுள்ளனர். 
 
நாடாளுமன்ற தேர்தலின் போது காசை வாங்கிக்கொண்டு ட்வீட்டரில் கருத்து போட்ட நடிகர், நடிகைகள் கூட இப்போது பின் வாங்கி விட்டார்களாம். அது சென்ட்ரல் எலக்சன் எதுவும் பிரச்சனை இல்லை. 
 
இது ஸ்டேட் எலக்சன் என்பதால் பல விஷயங்களை யோசித்து நடிகர், நடிகைகள் கூட்டாக ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி முடித்துள்ளார்களாம். அதாவது, எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ யாரும் கருத்து கூற கூடாது எனவும் தேர்தல் முடியும் வரை அவர் அவர் வேலையை பாருங்க நடப்பது நடக்கட்டும் இதனை யாரும் மீற கூடாது எனவும் ஆர்டராம். 
 

கட்சியில் இருக்கும் நடிகர்களுக்கு தடையில்லை

 
கட்சியில் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்கள் விருப்பம் போல செயல் படலாம். ஆனால், எந்த கட்சியில் இல்லாமல் பொதுவாக இருக்கும் நடிகர், நடிகைகள் நடப்பதை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் குறிப்பிட்ட அந்த கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதலங்களிலோ, பேட்டியிலோ கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என ரகசியமாக தீர்மானவே நிறைவேற்றியுள்ளார்களாம். 
 
 
இதில், ரகசிய கூட்டத்தில் உச்ச நட்சத்திரங்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்கள் வரை கலந்து கொண்டிருகிறார்கள் என்று கூறப்படுகின்றது. பொதுமக்களை குழப்பும் விதமாக நம்முடைய வார்த்தைகள் இருந்து விட கூடாது. 
 
அவர்கள் முடிவை அவர்களாகவே எடுக்கட்டும் என ஒதுங்கி விட்டது கோடம்பாக்கம். இதனாலேயே, இரும்பினால் குத்தம்.. தும்பினால் அபத்தம் என அடிக்கடி ஆக்டிவாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்த முன்னணி நடிகர்களின் ட்விட்டர் பக்கங்கள் மயான அமைதியாக இருக்கின்றதாம்.
 
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக நடிகர்களின் கருத்து மக்கள் மத்தியில, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பலரும் கூறிய நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கியுள்ளது நடிகர்கள் வட்டாரம்.
 

இப்போதாவது புத்தி வந்துச்சே...

விஷயம் அறிந்த கோலிவுட் வட்டாரத்தினர். இந்த முடிவை நாடாளுமன்ற தேர்தலிலேயே எடுத்திருக்க வேண்டும். இப்போதாவது நல்ல முடிவை எடுத்தார்களே. மறுபடியும் காசை வாங்கிட்டு கருத்தை சொல்லிட்டு இருந்தா மறுபடியும் சினிமா துறை சின்னாபின்னமாகி போயிருக்கும். அதுவரைக்கும் நல்லது. என்ன தான் நடக்கப்போகுதுன்னு பாப்போம் என கூறி வருகிறார்கள்.

கோடிகளை கொட்டியும் கதைவை இழுத்து சாத்திய கோடம்பாக்கம் - அதிருப்தியில் பிரபல அரசியல் கட்சி..! கோடிகளை கொட்டியும் கதைவை இழுத்து சாத்திய கோடம்பாக்கம் - அதிருப்தியில் பிரபல அரசியல் கட்சி..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.