படப்பிடிப்பு தளத்தில் படு கவர்ச்சியான உடையில் நயன்தாரா..! - படபடப்பான ரசிகர்கள்..! - தீயாய் பரவும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.இவர் தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உட்பட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா ரசிகர்களின் மனதில் ராணியாக அமர்ந்திருக்கும் நயனுக்கு காதல் தோல்விகள் தான் வெற்றிப் படிக்கட்டுகளாக மாறி உச்சத்தில் அமர வைத்தது என்றால் பொய் அல்ல.
 
முதலில் “வல்லவன்” படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வசப்பட்டார் நயன்தாரா. ஜோதிகா - சூர்யா மாதிரி அடுத்த நட்சத்திர ஜோடி தயாராகிவிட்டார்கள் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சிம்பு-நயன் அந்தரங்க படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அவற்றை எல்லாம் சிம்பு தான் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. 
 
அந்த சிக்கலை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்தார். அதன்பின்னர் பிரபுதேவா - நயன்தாரா காதல் கதை ஊர் அறிந்த செய்தி. இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவாவை மணப்பதற்காக மதம் மாறி காத்திருந்தார் நயன்தாரா. ஆம்... கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். 
 
பிரபுதேவா - நயன்தாரா திருமண ஏற்பாடுகள் கூட மும்பையில் நடைபெற்று வந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரபுதேவா நயன்தாராவை பிரிந்தார். 
 
2017ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்கவிருந்த படம் “கருப்புராஜா வெள்ளை ராஜா“. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை பிரபுதேவா மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 

 
இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

 
ஆனால், நயன்தாரா நிச்சயம் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் உடன் சேர்ந்து சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் அம்மணி. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்புகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

படப்பிடிப்பு தளத்தில் படு கவர்ச்சியான உடையில் நயன்தாரா..! - படபடப்பான ரசிகர்கள்..! - தீயாய் பரவும் வீடியோ..! படப்பிடிப்பு தளத்தில் படு கவர்ச்சியான உடையில் நயன்தாரா..! - படபடப்பான ரசிகர்கள்..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.