"நீங்களுமா இப்படி..!?.." - அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள லக்ஷ்மி மேனன்..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!

 
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய“சுந்தர பாண்டியன்”, சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன். மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. 
 
இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ‘கும்கி’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார். 
 

ஆளை விடுங்கடா சாமி

 
ஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி ஆளை விடுங்கடா சாமி என தமிழ் திரையுலகை விட்டு விலகினார். 
 
இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய ‘ரெக்க’ படம் வெளியானது. இந்த படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.இந்தப் படத்தை அடுத்து இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ‘ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. 
 
இதைத்தொடர்ந்து, கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.
 

ஜோதியில் ஐக்கியமான லக்ஷ்மி மேனன்

 
நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், புலிக்குத்தி பாண்டி ஆகிய படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் சில ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 
 
 
அதில் சேலை அணிந்திருக்கும் லக்ஷ்மி மேனன் நெற்றியில் பெரிய பொட்டு, லிப்ஸ்டிக் என ஆன்ட்டி கெட்டப்பில் உள்ளார். இதில் இடது பக்க மார்பிலும் அவர் வரைந்திருக்கும் டாட்டூ அப்படியே தெரிகிறது.


டாட்டூ வரைவது என்பது நடிகைகளை மத்தியில் சர்வ சாதாரணமான ஒன்று. த்ரிஷா முதல் நயன்தாரா வரை பலரும் டாட்டூ வரைந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப குத்து விளக்கான லக்ஷ்மி மேனனும் டாட்டூ வரைந்து அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளார்.

"நீங்களுமா இப்படி..!?.." - அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள லக்ஷ்மி மேனன்..! - தீயாய் பரவும் போட்டோஸ்..! "நீங்களுமா இப்படி..!?.." - அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள லக்ஷ்மி மேனன்..! - தீயாய் பரவும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on March 01, 2021 Rating: 5
Powered by Blogger.