"வான வவ் வவ்.. வான வவ் வவ் வன வவ்..." - நீங்க அத பாத்தீங்களா..? - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - கடுப்பில் ரசிகர்கள்..!

 
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் பிரேமம். சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோருக்கு அறிமுகப்படமாக அமைந்த இந்த படம் மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் நடித்த அனைத்து நாயகிகளும் சினிமா துறையில் இன்று தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றனர். 
 
குறிப்பாக அனுபமா பரமேஷ்வரன்- மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் காட்டி வந்தார். தமிழில் கொடி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த அனுபமா, லாக்-டவுனுக்கு முன்பு வரை அதர்வாவுடன் ’தள்ளிப் போகாதே’ படத்தில் நடித்து வந்தார். 
 
இப்படத்தை ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கிவந்தார். இந்நிலையில், சமீபத்தில் அனுபமாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. 
 
இதை கண்ட ரசிகர்கள் சிலர் அவர் கவர்ச்சிக்கு ட்ராக் மாறி விட்டார் என்று சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழ் படமொன்றில் நடித்து வருகிறார் அனுபமா. நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னு கோரி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. 
 
இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இது குறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, 'கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். 
 
 
அதன்பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது என்றார். மேலும் நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் என்ற அவர், நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். எனவே ஒப்பிட வேண்டாம் என தெரிவித்தார்.
 
இந்நிலையில், கலர்பொடியை பூசிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பாத்தீங்களா..? எவரு அக்கட கலரு பூசிந்தி என்று கதறி வருகிறார்கள். 


சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரா கொண்டா பைக்கில் வரும் காட்சியில் வைகைப்புயலின் தலையை இணைத்து கோபமாக அந்த இடத்தில் கலர் பூசிய நபரை நோக்கி செல்வது போல மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"வான வவ் வவ்.. வான வவ் வவ் வன வவ்..." - நீங்க அத பாத்தீங்களா..? - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - கடுப்பில் ரசிகர்கள்..! "வான வவ் வவ்.. வான வவ் வவ் வன வவ்..." - நீங்க அத பாத்தீங்களா..? - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - கடுப்பில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 01, 2021 Rating: 5
Powered by Blogger.