"42 வயதிலும் இப்படியா..?.." - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும், 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளவர் நடிகை மஞ்சு வாரியர். யங் ஹீரோயின்களையே பொறாமை பட வைக்கும் அழகில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
நடிகை ஜோதிகாவை போல் திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதைக்கு முக்கியத்தும் உள்ள படங்களை மலையாளத்தில் தேர்வு செய்து நடித்து வருபவர் மஞ்சு வாரியர்.இவர் பிரபல மலையாள நடிகர், திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் உள்ளார்.
 
மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், வெற்றிமாறன் இயக்கத்தில் "அசுரன்" படத்தில் நடித்தார். பச்சையம்மாள் கேரக்டரில் இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வந்திருக்காது என ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு நடிப்பில் வெளுத்துவாங்கினார். 
 
 
தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் மஞ்சு வாரியார். மலையாளத்தில் "சதுர்முகம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ரஞ்சித் கமலா சங்கர் - ஷாலி வி இயக்குகின்றனர். 
 
 
ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார். 


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இவருக்கு 42 வயசா..? நம்பவே முடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.

"42 வயதிலும் இப்படியா..?.." - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! "42  வயதிலும் இப்படியா..?.." - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 16, 2021 Rating: 5
Powered by Blogger.