நடிகர் விவேக் மரணம் - உச்ச கட்ட சோகத்தில் ரசிகர்கள் - இயக்குனர் சேரன் என்ன சொல்லியுள்ளார் பாருங்க..!

 
மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59. 
 
விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். 
 
வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
 
பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சினிமா நடிகர் என்பதை தாண்டி ஒரு சமூக சேவகரின் மறைவு என்பதை உணர்ந்த ரசிகர்கள் தங்கள் வேதனைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 
இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். யார் யார் என்ன கூறியுள்ளார்கள் என்று இங்கே பார்ப்போம்.  
 
இயக்குனர் சேரன் 
 
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எத்தகைய மனிதர்களையும் இறைவன் சூழ்ச்சியால் காவு கொள்வான் என்றால்....எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார்.... திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்...  
 
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் 
 
OMG..cant believe I woke up to this Shocking news abt Legendary @Actor_Vivek sir. Heartbreaking..Greatest Comedian of our Times who always incorporated a Social Message into his COMEDY. I hav always been his diehard FAN. U wl live in our Hearts forever dear Sir  
 
நடிகர் பார்த்திபன் 
 
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!  
 
கேமராமேன் விஜய் மில்டன் 
 
உங்கள் நினைவுகளும் உங்க்ள் கருத்துகளும் என்றும் எங்களுடன் இருக்கும். RIP @Actor_Vivek SIR 
 
நடிகை அம்மு அபிராமி
 
Extremely shocked, our beloved chinna kalaivaanar vivek sir left us , huge loss for all of us ,may his soul rest in peace .நடிகர் விவேக் மரணம் - உச்ச கட்ட சோகத்தில் ரசிகர்கள் - இயக்குனர் சேரன் என்ன சொல்லியுள்ளார் பாருங்க..! நடிகர் விவேக் மரணம் - உச்ச கட்ட சோகத்தில் ரசிகர்கள் - இயக்குனர் சேரன் என்ன சொல்லியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on April 16, 2021 Rating: 5
Powered by Blogger.