டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..!


சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 
 
3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். 
 
இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் மிகவும் பிரபலமானார். 
 
அடுத்த படமும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
இவர் நடித்த முதல் படம் வெளியாகும் முன்னரே இவருக்கு தொடர்ந்து பட வாய்புகள் குவிந்துவருகின்றது.

டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..! டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் - படம் வெளியாகும் முன்பே குவியும் பட வாய்ப்புகள்..! Reviewed by Tamizhakam on April 29, 2021 Rating: 5
Powered by Blogger.