"என்னா ஷேப்பு.. செதுக்கு வச்ச தங்க சிலை.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது நடிப்பு திறமையால் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் இவர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் ஒன்று பரவி உள்ளது. 
 
இந்நிலையில் குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக, ராணி போன்ற உடை அணிந்த அவரின் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேசும் இணைந்திருப்பதாக தகவல் பரவியது.
 
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில், அருள் மொழி வர்மனின் தங்கையாக நடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறாராம். இதனால் ஜெயம் ரவியின் தங்கை வேடகத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம்.
 
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்று மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் இடையில் படப்பிடிப்புக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். 
 
 
இந்நிலையில் அவரது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கல்கியின் காவியமான'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக உடையணிந்துள்ளார். நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம், பெரும் நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து இயக்கி வருகிறார். 
 
'பொன்னியின் செல்வன்' படத்தில், குந்தவை கதாபாத்திரம், முன்னணி கதாபாத்திரமான அருள் மொழி வர்மனின் மூத்த சகோதரி. அப்படியெனில் மணி ரத்னம் படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரியாக கீர்த்தி நடிப்பார் எனத் தெரிகிறது. 


 
இது ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இருப்பினும் கீர்த்தியின் அந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும், ஃபேன்மேட் போஸ்டர் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தயாரிப்பு தரப்பில் விரைவில் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"என்னா ஷேப்பு.. செதுக்கு வச்ச தங்க சிலை.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. செதுக்கு வச்ச தங்க சிலை.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.