"அட தொயரத்த.." - என்னடா இது நேஷனல் க்ரஷ்-க்கு வந்த சோதனை..! - வைரலாகும் புகைப்படங்கள்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!


அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல இன்கேம் இன்கேம் காவாலே என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
 
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். 
 
தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது.இவரின் துறுதுறு பாவனைகளும், கெத்தான உடல்மொழியும், சுண்டியிழுக்கும் தோற்றப் பொலிவும், கட்டிப்போடும் நடிப்பும் எப்பேர்ப்பட்ட இளசுகளின் நெஞ்சை துளைத்திடவே செய்யும். அந்தளவுக்கு தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயினாக ரசிக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. 
 
சினிமாவில் நாயகிகளை பொறுத்தவரை அவர்களுக்கான வெற்றி ஃபார்முலா ஒன்றே ஒன்றுதான். ரசிக்கவைக்கும் அழகும் தேர்ச்சியான நடிப்பும் ஒருசேர வெளிப்படும்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்கள்; ரசிகர்களை வசப்படுத்துகிறார்கள். 
 
ராஷ்மிகாவின் கரியரில் இதுதான் நேர்ந்தது. திரையில் அழகு வழியும் பொம்மையாக அல்லாமல், கில்லி அடிக்கும் அம்மணியாக தோன்றுவதையே ராஷ்மிகா விரும்புகிறார் என்பதையே அவருடைய படத்தேர்வுகள் காட்டுகின்றன. ரசிகர்கள் இவரை நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைப்பது உண்டு. 
 
 
இந்நிலையில், சலூன் கடை ஒன்றில் இவரது புகைப்படத்தை மொட்டையடித்து மாடலாக பயன் படுத்தியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இது என்னடா நேஷனல் க்ரஷ்-க்கு வந்த சோதனை என்று பங்கம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

"அட தொயரத்த.." - என்னடா இது நேஷனல் க்ரஷ்-க்கு வந்த சோதனை..! - வைரலாகும் புகைப்படங்கள்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..! "அட தொயரத்த.." - என்னடா இது நேஷனல் க்ரஷ்-க்கு வந்த சோதனை..! - வைரலாகும் புகைப்படங்கள்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on April 14, 2021 Rating: 5
Powered by Blogger.