என்ன சொல்றீங்க..? - நயன்தாரா கர்பமா இருக்காரா..? - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

 
நடிகை நயன்தாரா 'ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து ’சந்திரமுகி’படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
 
நடிகை நயன்தாரா பெரும்பாலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் கதைகளே தேர்வு செய்து நடிப்பார்.அதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
 
மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதை அனைவரும் அறிவோம்.இருவரும் சமீபத்தில் சொகுசு விமானத்தில் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.விக்னேஷ் சிவன் அவ்வப்போது தன் காதலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 
 
ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை என்பதால் நயன்தாராவின் புகைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விக்னேஷ் சிவனோ திங்கட்கிழமை தான் புகைப்படத்தை வெளியிட்டார்.இருவருமே கருப்பு நிற உடையில் கட்டிப்பிடித்து சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தனர். 
 
நயன்தாரா கொடுத்த அந்த போஸ் தான் பிரச்சனையாகியிருக்கிறது. அவர் ஏதோ பாசமாக விக்கி மீது சாய்ந்து நிற்க, நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
 
நயன்தாராவுக்கு திருமணம் நடந்துவிட்டது என்று அடிக்கடி வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று கர்ப்பம் என்று பேசுகிறார்கள். இது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளிப்பார் என்று எல்லாம் எதிர்பார்த்தனர்.
 
 
யாரோ, ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் விளக்கம் அளிக்க முடியாது என்கிற மூடில் இருக்கிறார் விக்கி.

என்ன சொல்றீங்க..? - நயன்தாரா கர்பமா இருக்காரா..? - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..! என்ன சொல்றீங்க..? - நயன்தாரா கர்பமா இருக்காரா..? - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 24, 2021 Rating: 5
Powered by Blogger.