வயசான காலத்துல இதெல்லாம் தேவையா..? - விவகாரமான கேரக்டரில் அனுஷ்கா - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன. 
 
'பாகமதி, சைலன்ஸ்' ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் அவர் நடித்தார். 'சைரா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்தார். 
 
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்து தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். ஆனால், அப்படம் விவகாரமான கதை கொண்ட படம் என்கிறார்கள். படத்தில் 40 வயது பெண் கதாபாத்திரத்தில அனுஷ்கா நடிக்கப் போகிறாராம். 
 

இதில் விவகாரமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் அவர் தன்னை விட 20 வயது குறைவான இளைஞனரைக் காதலிக்கும் கதாபாத்திரமாம். 20 வயது இளைஞராக 'ஜதி ரத்னலு' படத்தில் நடித்த நவின் பொலிஷெட்டி நடிக்கப் போகிறார். 
 
நிஜ வாழ்க்கையிலும் 40 வயதைத் தொட்டுள்ள அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

வயசான காலத்துல இதெல்லாம் தேவையா..? - விவகாரமான கேரக்டரில் அனுஷ்கா - ஷாக் ஆன ரசிகர்கள்..! வயசான காலத்துல இதெல்லாம் தேவையா..? - விவகாரமான கேரக்டரில் அனுஷ்கா - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 10, 2021 Rating: 5
Powered by Blogger.